மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து இரண்டாவது நாளாக இன்று கட்சி நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அவ்வகையில் சிவகங்கை, வேலூர் மற்றும் திருவண்ணாமலை தொகுதி அதிமுக நிர்வாகிகளை இன்று அவர் சந்திக்கிறார். இதில் தேர்தல் தோல்வி அதிமுகவை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை அவர் கேட்டறிய உள்ளார். தொடர்ந்து ஜூலை 19ஆம் தேதி வரை தொகுதி வாரியாக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.