மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்படும் என்பதால் அந்தப் பதவியில் அமரப்போவது யார்? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மக்களவையின் மூத்த உறுப்பினர்களுக்கு அந்த பொறுப்பு வழங்கப்படும் என்பதால் ஏழாவது முறையாக எம்பிக்களாக இருக்கும் திமுகவின் டி.ஆர்.பாலு, கேரள காங்கிரஸ் எம்.பி தலைவர் சுரேஷ்க்கு அந்த வாய்ப்பு உள்ளது. டி.ஆர்.பாலு மாநிலங்களவை எம்பியாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.