2026 இல் சட்டமன்றத்தில் புலிப்படை நுழைவது உறுதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மயிலாடுதுறையில் பேசிய அவர், நாடாளுமன்றத்திற்கு சென்று பேசுகிறோமா இல்லையோ மக்கள் மன்றத்தில் தொடர்ச்சியாக பேசுவோம். உயர்ந்த லட்சியத்தை அடைய கடுமையாக உழைப்போம். எங்களின் கனவு தேர்தலில் வென்று பதவியை பிடிப்பது அல்ல, மக்களின் மனதையும் சிந்தனையையும் வெல்வது தான் எங்கள் கனவு என தெரிவித்துள்ளார்.