2024-25 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், நாட்டின் வளர்ச்சிக்கான வேகத்தை அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளின் சக்தியை பயன்படுத்தி வேலை வாய்ப்புகளில் புதிய சகாப்தத்தை உருவாக்கும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதாக அவர் வரவேற்றுள்ளார். மேலும், நாட்டின் உயர்ந்த நோக்கத்திற்கான நம்பிக்கையை தருவதாகவும், இது மக்களுக்கான பட்ஜெட் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.