தருமபுரியில் ஊரகப் பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தருமபுரி பாளையம்புதூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு நகர்புறத்தில் 8.74 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டம் கிராம ஊராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.