புனேவை சேர்ந்த 42 வயது நபர் ஒருவர் சில மணி நேரங்களில் தன்னுடைய வங்கிக் கணக்கில் இருந்த 94 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். பங்குச்சந்தையில் டிரேடிங் மூலமாக அதிக லாபம் பெற வேண்டும் என்று விரும்பி the value team A13 என்ற whatsapp குழுவில் அந்த நபர் இணைந்துள்ளார்.
குழுவில் வந்த லிங்கை கிளிக் செய்ததும் அவருடைய வங்கி கணக்கில் இருந்த பணம் வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு தன்னிச்சையாக மாற்றப்பட்டதாக அவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.