திருப்பத்தூரில் நேற்று பள்ளிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்திய சிறுத்தை சுமார் 11 மணிநேர போராட்டத்திற்கு பின் பிடிபட்டது. திருப்பத்தூர் பள்ளி வளாகத்தில் நுழைந்த சிறுத்தை பின்னர் அருகே இருந்த கார் ஷெட்டிற்குள் நுழைந்தது. மருத்துவர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்துக் கூண்டில் அடைத்தனர். பின்னர் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அச்சிறுத்தை காட்டில் விடப்பட்டது. இந்த சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.