2023ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக மாறி உள்ளது. இந்தியாவின் மக்கள் தொகை 2023ன் படி 142.86 கோடி ஆகும். இது சீனாவின் 142.57 கோடி என்பதை விட 29 லட்சம் அதிகம். கடந்த 60 ஆண்டுகளாக உயர்ந்து கொண்டே இருந்த சீன மக்கள் தொகை கொரோனா தொற்றுக்குப் பின்னர் குறைய துவங்கியது. 2024ல் மீண்டும் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.