கோவை சாய்பாபா காலனி பகுதியில் ஆயுர்வேத மசாஜ் ஸ்பா என்ற பெயரில் விபச்சார தொழில் நடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் நேற்று அங்கே சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்கு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய திருச்சியை சேர்ந்த முகிலன் (23) உட்பட 6 பேரை கைது செய்தனர். விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 4 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.