தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். மஞ்சளில் கிருமி நாசினிகள் மற்றும் குர்குமின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. மஞ்சளை பாலில் சேர்த்து சாப்பிட்டால் நுரையீரலில் உள்ள சளி கரைந்து சுவாசம் எளிதாகிறது. மூக்கடைப்புடன் தலைவலி இருந்தால், சூடான பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.