தெற்கு எத்தியோப்பியாவின் கோபா மண்டலத்தில் கடந்த 21ம் தேதி கனமழை பெய்தது. இதனால். அங்கு மண் சரிவு ஏற்பட்டு குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உட்பட 55 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது. இந்த நிலையில் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ஐந்துக்கும் மேற்பட்டவர்களை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர் காணாமல் போனவர்களை தேடி வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.