டாஸ்மாக் மதுபானம் தரமானதாக இல்லை, `கிக் இல்லை’ என அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான். அதனால் தான், சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை நாடுகின்றனர் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். மேலும், சென்னையை பொறுத்தவரை சுகாதாரம் என்பது அதலபாதாளத்தில் தான் உள்ளது. உதாரணமாக ‘ஸ்வச் பாரத்தில்’ 44வது இடத்தில் இருந்த சென்னை, தற்போது 200வது இடத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என குற்றஞ்சாட்டினார்.