மாணவர்களை நாங்கள் படிக்க சொல்கிறோம், தமிழக ஆட்சியாளர்கள் குடிக்க அழைக்கிறார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் பேசிய அவர், தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு சாராயத்துடன், கஞ்சாவையும் கொடுத்து கெடுத்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுத்தால் வன்னியர்கள் அதிகம் இருப்பது தெரிந்துவிடும் என்று சிலர் அஞ்சுகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.