தமிழக சட்டப்பேரவையில் இன்று மதுவிலக்கு அமலாக்க திருத்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 64 பேர் பலியான சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இந்த திருத்த சட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.