உத்திரபிரதேச மாநிலத்தில் மத வழிபாட்டின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ஆன்மீக நெரிசலில் இறந்த அத்துணை உயிர்களுக்கும் அஞ்சலி செலுத்துகிறேன். மது போதைக்கும் மத போதைக்கும் உள்ளது, பூவுக்கும் புஷ்பத்துக்கும் உள்ள வேறுபாடு தான். கல்வி, பொருளாதாரம் மற்றும் பகுத்தறிவில் மேம்படாத தேசம் இப்படித்தான் தவணை முறையில் இறந்து கொண்டிருக்கும் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.