மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாடிலை இன்று மாலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்திக்கிறார். காவிரி விவகாரம் குறித்து நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்காக அவர் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். தமிழ்நாட்டுக்கு ஜூலை 31 வரை தினமும் ஒரு டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்ட நிலையில், அந்த அளவிலான நீரை திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது.