மோடி தலைமையிலான மத்திய அரசு ஐசியு-வில் இருப்பதால் அதனை காப்பாற்றிக் கொள்வதிலேயே அவர்கள் குறியாக இருப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார். பட்ஜெட்டில் பிஹார், ஆந்திராவுக்கு அதிக நிதி ஒதுக்கியது குறித்து பேசிய அவர், ஐசியுவில் இருக்கும் மத்திய அரசுக்கு யார் ஆக்ஸிஜன் கொடுக்கிறார்களோ அவர்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று வேடிக்கையாக விமர்சனம் செய்தார்.