மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக சென்னையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஆளுநர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்.