இண்டியா கூட்டணி ஆளும் மாநிலங்களை பாஜக புறக்கணித்திருப்பதாக கூறி இண்டியா கூட்டணி எம்.பிகள் பட்ஜெட்டை எதிர்த்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற சமாஜ்வாதி கட்சியின் மாநிலங்களவை எம்.பியும், பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் மனைவியான ஜெயா பச்சன் மத்திய அரசை விமர்சித்தார். இந்த பட்ஜெட் குறித்து பேசுவதற்கு எதுவுமே இல்லை. இது ஒரு நாடகம். பேப்பரில் இருக்கும் எந்த ஒரு வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்ற போவதில்லை என்று அவர் கூறிஉள்ளார்.