கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு முதல்வர் ஸ்டாலின்தான் காரணம் என EPS குற்றம் சாட்டியுள்ளார். கள்ளச்சாராய விவகாரத்தில் 3 வருடங்களாக எதுவுமே செய்யாமல் இருந்துவிட்டு தற்போது அதிகாரிகளை மாற்றிவிட்டேன் என்பது பொறுப்பற்ற தன்மை என்ற அவர், நீங்கள் அதிகாரிகளை மாற்ற 50 உயிர்கள் பலியாக வேண்டுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உங்களுக்கு மனசாட்சி கொஞ்சமாவது இருந்தால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.