மனிதர்களை போலவே பறவைகளும் திருநங்கைகளாக இருக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம் உண்மை தான். முற்றிலும் ஆண், பெண் அல்லாத பறவையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பறவை உலகின் மிக அரிதான மற்றும் விசித்திரமானது. இதில் பெண் மற்றும் ஆண் குணங்கள் காணப்படுகின்றன.
இவை “Gynandomores” என்று அழைக்கப்படுகின்றன. நியூசிலாந்து விஞ்ஞானி, ஒடாகோ பல்கலைக்கழக விலங்கியல் நிபுணர் பேராசிரியர் ஹமிஷ் ஸ்பென்சர், இந்த பறவையை கொலம்பியாவில் கண்டுபிடித்தார்.