மும்பையை சேர்ந்த துஷார் பவார் (33) முறை தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா சென்று வந்திருக்கிறார். அதனை மனைவியிடம் இருந்து மறைப்பதற்காக பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்து எறிந்திருக்கிறார். இதனையடுத்து நான்காவது முறையாக தாய்லாந்து செல்ல விமான நிலையம் வந்தவரை போலீசார் கைது செய்தனர். இந்திய சட்டப்படி பாஸ்போர்ட்டை சேதப்படுத்துவது குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.