நிதி ஆயோக் கூட்டத்தில் மைக் அணைக்கப்பட்டதாக மம்தா கூறியது முற்றிலும் தவறானது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கூடுதல் நேரம் எடுத்த அனைத்து மாநில முதல்வருக்கும் நினைவூட்டலுக்காக ஒலி எழுப்பப்பட்டதே தவிர, யாருடைய மைக்கும் அணக்கப்படவில்லை என்றார். உண்மைக்கு புறம்பான தகவலை மம்தா பானர்ஜி கூறியது துரதிர்ஷ்டவசமானது, அது உண்மையல்ல என்றும் கூறியுள்ளார்.