நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜியை கூடுதல் நேரம் பேசவிடாமல் தடுத்தது கண்டனத்துக்கு உரியது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில், மம்தா பானர்ஜி கூடுதலாக 5 நிமிடம் பேசுவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மோடி முதல்வராக இருந்த போது நிதி ஆயோக் கூட்டத்தில் 15 முதல் 20 நிமிடம் வரை பேசியுள்ளார் என்றார்.