மம்தா பானர்ஜியின் பேச்சுக்கு வங்கதேச அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அவரது பேச்சு தீவிரவாதத்தை ஊக்கப்படுத்துவதாக இந்திய தூதரகத்திடமும் முறையிட்டுள்ளது. அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டங்களால், வங்கதேசத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எல்லை மாநிலமான மேற்கு வங்கம் தேவையான உதவிகள் செய்து அடைக்கலமளிக்கும் என அம்மாநில முதல்வர் மம்தா பேசியிருந்தார்.