நெடுஞ்சாலையோரம் மரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டிருப்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். இதற்கான காரணம் என்ன என்று தெரியுமா? சுண்ணாம்பு கரைசலை மரத்தில் பூசுவதால் பூச்சி அரிப்பு தடுக்கப்படுகிறது. நெடுஞ்சாலை ஓரம் வெள்ளை வர்ணம் பூசப்படுவது வாகன ஓட்டிகள் எளிதாக பார்க்கும் வகையில் இருக்கிறது. வெயிலில் மர பட்டைகள் காயாமல் மரங்கள் நீண்ட காலம் வாழவும் இந்த வர்ண பூச்சிகள் உதவுகின்றன.