கேரளாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு சொத்து தகராறில் சொந்த அண்ணனின் 7 மற்றும் 3 வயது மகன்களை கொடூரமாக கொலை செய்த, தாமஸ் சாக்கோ என்பவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனை, 30 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் குறைத்துள்ளது. விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஒரு நிலையான கால தண்டனையாக மாற்றியமைக்க, நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது. வழக்கின் உண்மைகள், சூழ்நிலையின் அடிப்படையில் கடுமையான 30 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதே நீதி என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.