பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் ஜூலை 18ஆம் தேதி மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவ பரிசோதனையில், உணவு ஒவ்வாமை காரணமாக அவருக்கு இரைப்பை அழற்சி பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, அங்கேயே சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து டிஸ்சார்ஜானார்.