நடிகர் பகத் ஃபாசில் மீது கேரளாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் அவர் நடித்து வரும் ‘பைங்கிலி’ (painkili) படத்தின் காட்சிகள் அவசர சிகிச்சைப் பிரிவில் படமாக்கப்பட்டன. அப்போது, நோயாளிகள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் சிரமத்தை எதிர்கொண்டதாகக் கூறப்படுகிறது. ஊடக செய்திகளின் அடிப்படையில், மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து அவர் மீது வழக்கு பதிந்துள்ளது.