தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நாள்தோறும் ஆயிரங்கணக்கான பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும், பொது மக்களின் நலனுக்காக அவர்களின் பகுதிக்கு அருகிலேயே வாரந்தோறும் மருத்துவ காப்பீட்டு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற என்னென்ன தகுதி வேண்டும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
*ஆண்டு வருமானம் ₹1,20,000க்கு குறைவாக இருக்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலரிடம் வருமானச் சான்று பெற்று, குடும்ப அட்டை, ஆதாருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்து, காப்பீட்டு அட்டை பெறலாம்.
*குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இத்திட்டத்தில் பயன் பெறமுடியும்.