இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பை போட்டிகளில் 3,000 ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். சனிக்கிழமை நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் கோலி 37 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், 67 இன்னிங்சில் 3,000 ரன்களை கடந்த கிரிக்கெட் வீரர் என்ற வரலாறு படைத்தார்.