இயக்குநரும், நடிகருமான சேரன் மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘இஸ்க்’ படத்தை இயக்கிய அனுராஜ் மனோகர், இந்த படத்தை இயக்குகிறார். டொவினோ தாமஸ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு ‘நரிவேட்ட’ என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து சேரன் தனது எக்ஸ் பக்கத்தில், நண்பர்களே… முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது.. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் இணைந்து ‘இஸ்க்’ படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன்.. என்றும்போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி” என தெரிவித்துள்ளார்.