விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தின் 2 பாடல்கள் சமீபத்தில் வெளியாகி, கவனம் ஈர்த்தது. இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் ஜூன் 29ஆம் தேதி வெளியாகும் என படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. முன்னதாக, இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்று வழங்கியது.