வடகிழக்கு மாநிலங்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அசாம் மற்றும் அருணாச்சலப்பிரதேச மாநில மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம் காரணமாக 3,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அதில் சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அசாமில் பெய்து வரும் தொடர் கனமழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் நாகம், திப்ருகார் உள்ளிட்ட மாவட்டங்கள் நீரில் மூழ்கியுள்ளன.