மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை எடுத்து டேண் டீ நிர்வாகம் நடத்துவது சாத்தியமற்றது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது. டேண் டீ நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தொடக்கத்தில் நிர்வாகம் லாபம் ஈட்டினாலும், கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. மிகுந்த பொருளாதார நெருக்கடியில் இயங்கி வருகிறது. இத்தகைய சூழலில் மாஞ்சோலையை எடுத்து நடத்துவது சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளது.