மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்றும் விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. நெல்லையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துராமன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர் தாக்கல் செய்த மனுவில், 96 ஆண்டுகளாக வனத்தில் குடியிருந்து வரும் மாஞ்சோலை மக்களுக்கு வன உரிமை மறுக்கப்படுகிறது. மாஞ்சோலை தொழிலாளர்கள் வெளியேற்றப்படுவது மனித உரிமை மீறல் என குறிப்பிட்டுள்ளார்