சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்தால் மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த அபராத தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி மாடுகள் முதல் முறை பிடிபட்டால் மாட்டின் உரிமையாளர்களுக்கு 10,000 அபராதம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே மாடு 2ம் முறை பிடிபடும் போது மாட்டின் உரிமையாளர்களுக்கு 15,000 என்றும், மேலும் பராமரிப்பு செலவுக்காக மாடு ஒன்றுக்கு 1000 என கூடுதலாக வசூலிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.