கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவன் கிஷோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகுந்த மன வேதனை அடைந்ததாக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ள அவர், சிறுவனின் பெற்றோருக்கு ₹3 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்த கிஷோர், பள்ளி மைதானத்தில் விளையாடியபோது, தலையில் ஈட்டி பாய்ந்து பலியானார்.