டெல்லியில் பயிற்சி மையத்திற்குள் தண்ணீர் புகுந்ததில் யூபிஎஸ்சி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. சம்பவத்தின் தீவிரத் தன்மை மற்றும் அரசு ஊழியர்களின் ஊழல் சாத்திய கூறுகளால் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட மூத்த அதிகாரியை நியமிக்குமாறு மத்திய விஜிலென்ஸ் கமிஷனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது