தமிழகத்தில் பத்து மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தொகுதி வாரியாக நடிகர் விஜய் இன்று ஊக்கத்தொகை வழங்குகின்றார். முதல் கட்டமாக 21 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு இன்று ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் நிகழ்ச்சி என்பதால் அவர் என்ன பேசுவார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்காக காலையிலேயே விஜய் திருவான்மியூரில் உள்ள திருமண மண்டபம் வந்துள்ளார்.