தமிழ்நாட்டு மாணவர்கள் உயர உயர பறக்க வேண்டும். திராவிட மாடல் அரசில் தமிழ்நாட்டு மாணவர்கள் உயர உயர பறக்க வேண்டும் என முதலவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், மாணவச் செல்வங்களே உங்கள் கல்விக்கு எந்த தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது என் பொறுப்பு. எதிலும் கவனத்தை சிதற விடாமல், எங்கேயும் தேங்கி நின்று விடாமல் தொடர்ந்து படிக்க வேண்டும் என்பதை தான் பதிலுக்கு உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன். இது தமிழ்நாட்டு பள்ளி கல்வித்துறையின் பொற்காலம் என வரலாறு பேச வேண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறியுள்ளார்.