பாரதியார் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளின் மாணவர்களுக்கு மே/ஜூன் மாதங்களில் நடைபெற்ற இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் தேர்வு முடிவுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பல்கலை., இணையதளம் வாயிலாக, மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு ஜூலை 29 வரை விண்ணப்பிக்கலாம். சிறப்புத் துணைத் தேர்வு செப்.8ஆம் தேதி நடைபெறும்.