தமிழகத்தில் மின்சார பயன்பாட்டை மாதம் தோறும் கணக்கிட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார். பிற மாநிலங்களில் மாதம் தோறும் மின்சார பயன்பாடு கணக்கீடு செய்யப்படும் போது தமிழகத்தில் மட்டும் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை கணக்கிடுவதால் மின் கட்டணம் அதிகமாவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.