சமீபத்தில் தமிழ்நாடு பாஜகவில் இருந்து இரண்டாவது முறையாக நீக்கப்பட்ட திருச்சி சிவா பாஜகவிற்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். மணல் கடத்தல் கும்பலுடன் பாஜகவிற்கு தொடர்பு உள்ளதாகவும் அவர்களிடமிருந்து மாதம் 50 லட்சம் முதல் 80 கோடி ரூபாய் வரை பாஜகவினர் பணம் பெறுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். பணம் பெறுபவர்கள் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.