ஆசிரியர் அல்லாத ஆய்வக உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியம் ₹6,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய விலைவாசி சூழலில், மக்கள் குறித்து யோசிக்க மாட்டீர்களா?, 36 ஆயிரத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும்?, ஒரு நாளைக்கு ₹200 போதுமா? என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.