தமிழகத்தில் 6083 ஊராட்சிகளில் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் குடும்பங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய வளர் இளம் பெண்களுக்கு மாதவிடாய் கால சுகாதாரம் மேலாண்மை குறித்து பயிற்சி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் கூட்டுறவு பணியாளர்களின் வாரிசுகள் அரசு பள்ளிகளில் பயின்று 10, 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றால் விருதுகள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.