மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்து, மாநிலத்துக்கென தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரிடையே கருத்துக்கள் கேட்கப்பட்டு, அக்கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்திற்கென பிரத்தியேகமாக மாநில கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை தற்போது தமிழக முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.