ராஜஸ்தான் மாநிலத்தில் 10ஆம் வகுப்பு பள்ளி மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளியில் படித்து வரும் மாணவன் யதேந்திர உபாத்யாய் (16), வகுப்புக்கு செல்லும் போது மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக, மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாணவன் இதயக் கோளாறுகளுடன் பிறந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.