நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் காதல் ஜோடிக்கு ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைத்த கம்யூனிஸ்ட் நிர்வாகிகளுடன் பெண் வீட்டார் மோதலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது
கம்யூனிஸ்ட் அலுவலகத்தின் கதவு இருக்கைகளை அடித்து நொறுக்கி பெண் வீட்டார் 30க்கும் மேற்பட்டோர் ரகளையில் ஈடுபட்டனர். ஜாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை அழைத்துச் செல்ல உறவினர்கள் வந்ததால் மோதல் ஏற்பட்டது.
பட்டியலின இளைஞரும், வேறு சமூக பெண்ணும் காதலிப்பதாக மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர். தஞ்சம் அடைந்த இருவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் நடந்ததை அடுத்து பெண் வீட்டாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக கதவு, இருக்கைகளை அடித்து நொறுக்கி பெண் வீட்டார் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில் நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் மீதான தாக்குதலுக்கு கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தாக்குதல் சம்பவம் தொடர்பானவர்களை கைது செய்ய வேண்டும். நெல்லையில் சாதிய மோதல் தொடர்பாக ஏராளமான படுகொலைகள் நடந்துள்ளன. காவல்துறை மெத்தனமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது” என தெரிவித்தார்.