மார்பக புற்று நோய்க்கு இந்தியாவில் 2014 முதல் தற்போது வரை 10 ஆண்டுகளில் 7,36,579 பெண்கள் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்களவையில் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த போது இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜதோ தெரிவித்துள்ளார். பத்து ஆண்டுகளில் கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு 3,18,907 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.